Articolo completo
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை சார்பில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் நிர்மல் குமார், நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், த.வெ.க சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய அனைத்து துறை சார்பிலான வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார், 'டெல்லி பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள வெங்கட் நாராயணா கர்நாடகாவை சேர்ந்தவரல்ல. அவர் ஆந்திராவை சேர்ந்தவர். அந்த பொறுப்பில் இருந்து அவர் எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்க மாட்டார். விஜய்க்கு பல அழுத்தங்கள் வந்தபோது உடனிருந்தவர். தவறான நபருக்கு அப்பொறுப்பு வழங்கப்படவில்லை. அவர் டெல்லியிருந்து ஒருங்கிணைப்பு வேலைகளை மட்டுமே செய்ய போகிறார். அவருக்கு இந்த பொறுப்பெல்லாம் பெரியது கிடையாது; இது தவறான நபருக்கு கொடுக்கப்படவில்லை. விஜய் - கே.வெங்கட நாராயணா டெல்லியிலயே பிறந்து வளர்ந்தவர்கள் பல காலங்களில் பிரதிநிதியாக போட்டிருக்கிறார்கள். முன்பு கட்சிக்குள் யார் யாருக்கெல்லாம் பொறுப்புகள் கொடுக்க முடியவில்லையோ அவர்களுக்கு இந்த பொறுப்பை தற்காலிகமாக கொடுத்து வைத்திருந்தார்கள் திமுகவும் அதிமுகவும். அவர்களுக்கு வாகனமும் கொடுத்திருந்தார்கள். ஆனால் இவருக்கு வண்டியும் தேவை இல்லை. எல்லாமே அவரிடம் உள்ளது. சின்ன பொறுப்பு தான், நம்பிக்கையான நபர் துறையை தெரிந்தவர் என்பதால் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இதுவரை அலங்காரமாக இருந்த பதவி, இன்று நம்பிக்கையுள்ள ஒருவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அரசு அமைவதற்கு உழைத்தவர்கள் முதலமைச்சரின் ஆலோசகர்களாக இருப்பதில் என்ன தவறு? அனைத்து பொறுப்புகளிலும் பொருத்தமானவர்கள் தான் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை உயர்நீதிமன்றம் கிளை இஸ்லாமிய மதத்திற்கு மாறியவர்களுக்கு சலுகை கிடையாது என்ற நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக விரைவில் மேல்முறையீடு செய்யவுள்ளோம். அதற்கான வேலைகளை துவங்கி விட்டோம். உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குறிப்பிட்டதை பொதுவெளியில் பேச வேண்டாம் என நினைக்கிறேன் இது குறித்து அனைத்து முயற்சிகளையும் எடுத்தோம், நாம் நேரமும் கேட்டோம் நேரம் கொடுக்கப்படவில்லை கண்டிப்பாக மேல்முறையீடு செய்வோம்; அன்றே அதற்கான முயற்சிகள் வேலைகள் துவங்கப்பட்டு விட்டது நிறைய இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் ஆங்காங்கே தற்காலிகமாக இயங்கி வருகிறது அரசு நிலங்களை அடையாளம் கண்டு ஷெட் போடுவதற்கான வேலையை தொடங்கவுள்ளோம். எங்கெல்லாம் கொள்முதல் நிலையங்கள் தனியார் இடங்களில் இயங்க வருகிறதோ அதனை கண்டறிந்து அதனை அரசு இடங்களுக்கு மாற்றவுள்ளோம். மதுரை மாநகராட்சியில் இப்போதுள்ள ஒப்பந்த நிறுவனம் பல முறைகேடுகளை செய்திருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. வழக்கு பதிவு செய்ய கூறியிருக்கிறோம். கடந்த மாதம் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு நிறுவனம் மீது புகார் கொடுத்து வழக்குப்பதிவு செய்ய உள்ளார்கள். செங்கோட்டையன் கழிவுமேலாண்மை தனியாரிடம் தான் கொடுத்தாக வேண்டும். ஏற்கனவே இருக்கக்கூடிய பணியாளர்களை எந்த தொந்தரவும் செய்யப் போவதில்லை ; முன்பு உள்ளதையே பின்பற்றப் போகிறோம். மதுரை மாநகராட்சி பகுதியில் சாலைகள் மோசமாக இருப்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதி விபரத்தையும் சேர்ப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் சொல்லவில்லை. செங்கோட்டையன் சொன்னது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. சாதி சான்றிதழை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தான் சொன்னார். செங்கோட்டையன் சொன்னது போல, அப்படி எந்த திட்டமும் அரசுக்கு இல்லை. செங்கோட்டையன் அவசரத்தில் தவறுதலாக சொல்லி விட்டார்" என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Articolo completo — vedi il link sotto




