தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், காடல்குடி அருகே பைக்கில் இருந்து நிலைதடுமாறி விழுந்து காயமடைந்த முதியவர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பைக் விபத்து தூத்துக்குடி மாவட்டம், காடல்குடி போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்த செண்பகம் மகன் நாகப்பாண்டி (வயது 68). இவர் கடந்த 5-ம் தேதி தனது பைக்கில் காடல்குடியில் இருந்து விளாத்திகுளம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். முதியவர் உயிரிழப்பு இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நாகப்பாண்டியை அருகில் இருந்த பொது மக்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இந்த பைக் விபத்து சம்பவம் குறித்து காடல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-elderly-man-dies-in-bike-accident




