நெல்லை, நெல்லையில் விரும்பிய கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைக்காததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வில் வெற்றி நெல்லை பெருமாள்புரம் அன்புநகர் சித்தார்தர் நகரைச் சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன். தனியார் ஐ.டி. நிறுவன ஊழியரான இவர் தற்போது வீட்டில் இருந்தவாறே ஆன்லைன் மூலம் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பமில்தா. இவர்களுடைய மூத்த மகள் சுருதிலயா (21 வயது). பிளஸ்-2 படித்து விட்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இவர் சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் வெற்றி பெற்றார். தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 7 கல்லூரிகளில் சேருவதற்காக கலந்தாய்வில் விண்ணப்பித்து இருந்தார். தூக்குப்போட்டு தற்கொலை அதற்கான கலந்தாய்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. இதில், மாணவி சுருதிலயாவின் பெயர் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் தான் விரும்பிய கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க இடம் கிடைக்கவில்லையே என்று மனமுடைந்த நிலையில் இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகள் சுருதிலயாவை பல இடங்களிலும் தேடிப் பார்த்தனர். அவரை எங்கும் காணாததால் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டுக்கு பின்னால் இருந்த குடோனில் மாணவி சுருதிலயா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. போலீசார் விசாரணை இதையடுத்து மாணவியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/mbbs-seat-denial-leads-to-tragic-decision




