மாஸ்கோ, ரஷியாவில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 11 பேர் உயிரிழந்தனர். ரஷியாவின் வட காகசஸ் மாகாணத்தில் மிஷிர்ஹி மலை அமைந்துள்ளது. இந்த மலையில் நேற்று முன் தினம் 33 மலையேற்ற வீரர்கள் ஏறியுள்ளனர். பனிச்சரிவு - 11 பேர் பலி அப்போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் மாயமாகினர். எஞ்சிய 16 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதேவேளை, இந்த பனிச்சரிவை தொடர்ந்து மாயமான 6 பேரை தேடும் பணியில் 50 பேர் கொண்ட மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/avalanche-in-russia-11-mountaineers-killed




