விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10, 19 போட்டியாளர்கள் கலந்து கொள்ள, கடந்த 6ம் தேதி அமர்க்களமாகத் தொடங்கியது. எந்த சீசனிலும் இல்லாதபடி முதல்முறையாக இந்த சீசனில் பல போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் முன்பே எவிக்ட் ஆகி அறிமுக மேடையிலிருந்தபடியே வெளியேறினர். அப்படி இந்த சீசனின் முதல் ஆளாக வெளியேறினார் சீரியல் நடிகை ஷப்னம். இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு போட்டியாளர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி இருக்கிறார். அவர் பிளாக் பாண்டி. பிளாக் பாண்டி இது தொடர்பாக நிகழ்ச்சி தொடர்புடைய வட்டாரங்களில் விசாரித்த போது உடல்நலனைக் காரணம் காட்டி அவரது வெளியேற்றம் நிகழ்ந்திருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பாண்டி வெளியேறியதால் தற்போது போட்டியாளர்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்துள்ளது. அதேநேரம் பாண்டி வைல்டு கார்டு என்ட்ரிமூலம் நிகழ்ச்சிக்குள் திரும்பவும் செல்ல நேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையாம். இந்த சீசனில் முதல் நாளிலேயே பலர் வெளியேறிய போது அவர்கள் சிலரிடம் வைல்டு கார்டு என்ட்ரி இருக்கிறட்து, பார்த்துக் கொள்ளலாமென சொல்லப்பட்டதாம். தவிர நடிகை ஆனந்தி உள்ளிட்ட சிலர் முதல் நாள் செல்வதாக இருந்து, கடைசி நிமிடத்தில் அது நடக்காததால் அவர்களுக்குமே வைல்டு கார்டு கதவு திறந்திருப்பதாக ஒரு பேச்சும் அடிபடுகிறது. இந்நிலையில் பிளாக் பாண்டியும் இந்த லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளார். பார்க்கலாம், யாருக்கு வைல்டு கார்டு கதவு திறக்கிறதென. BB Tamil 10: "டிவிக்கு வந்த இத்தன வருஷத்துல இப்படி மோசமான அனுபவத்தைச் சந்திச்சதே இல்ல"- ஷப்னம் அம்மா முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://cinema.vikatan.com/television/news-regarding-actor-black-pandi-quit-from-biggboss-tamil-10




