மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா என்ற இடத்தில் உள்ள சஞ்சய் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கல்பனா மிஸ்ரா(25) என்ற பெண் பிரசவத்திற்ககாகச் சேர்க்கப்பட்டு இருந்தார். ஹட்வா என்ற இடத்தைச் சேர்ந்த கல்பனாவிற்கு இரவு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்ற பிறகு கல்பனாவின் உடல் நிலை மோசம் அடைந்தது. இதையடுத்து அவரது தந்தை ராம்சரண் மிஸ்ரா, கல்பனாவைப் பரிசோதிக்கவும், அவரது உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் மருத்துவர்களிடம் பலமுறை கேட்டுக் கொண்டார். ஆனால் அவருக்குப் போதுமான சிகிச்சை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதில் கல்பனா பரிதாபமாகச் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். உறவினர்களிடம் ஓட கல்பனா முயற்சி அவரது குழந்தையும் பரிதாபமாக இறந்தது. இது குறித்து கல்பனாவின் குடும்பத்தினர் டாக்டர்களிடம் கேட்டபோது, கல்பனா கர்ப்ப காலத்தில் தேவையான பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்றும், அவரது ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு திடீரென அதிகரித்ததாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். மரணம் குறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராகுல் மிஸ்ரா கூறுகையில், ''கல்பனா பரிந்துரைக்கப்பட்ட எண்ணிக்கையில் பிரசவத்திற்கு முந்தைய பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை. இந்தச் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. கல்பனாவின் குடும்பம் தவறு செய்துவிட்டது. ஒரு கர்ப்பிணிப் பெண் குறைந்தபட்சம் எட்டு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். கல்பனாவின் ஆவணங்களைப் பார்க்கும்போது, அவர் இரண்டு முறை மட்டுமே பரிசோதித்து இருக்கிறார். இரண்டு பரிசோதனைகளும் தனியார் மருத்துவமனையில் செய்யப்பட்டது. உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, இரண்டு நர்சிங் அதிகாரிகள் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் யார் பொறுப்பு என்று கண்டறியப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். டாக்டர்கள் சிகிச்சையில் எந்த வித தவறும் செய்யவில்லை," என்று அவர் கூறினார். கல்பனா மிஸ்ரா இறப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, தனது குழந்தையைப் பெற்றெடுத்த சிறிது நேரத்திலேயே, தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி தனது குடும்பத்தினரிடம் கெஞ்சினார். "அப்பா இதுபோன்ற சிகிச்சை தொடர்ந்தால், இவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள்" என்று தனது தந்தையிடம் கல்பனா கெஞ்சிய வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் "நான் பிழைக்க மாட்டேன், தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள், என் உயிருக்கு ஆபத்து உள்ளது" என்று கல்பனா கூறுகிறார். கல்பனா இறப்பதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பு அவர் மிகவும் மன உளைச்சலில் இருப்பதாகத் தோன்றுகிறது. கல்பனா தனது உறவினர்களிடம் செல்ல முயன்றார். ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் அவரை வெளியேற விடாமல் தடுக்க முயற்சித்தனர். ஆனாலும் திரும்பத் திரும்ப தனது உறவினர்களிடம் செல்ல கல்பனா முயற்சி செய்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி இருக்கிறது. ஆனால் சிறிது நேரத்தில் கல்பனா இறந்து போனார். நெல்லை: இளைஞர் தலை துண்டித்துக் கொலை; விசாரணையில் பகீர்; போலீஸ் குவிப்பால் பதற்றம்; நடந்தது என்ன? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/trending/father-save-me-they-will-kill-me-woman-dies-in-hospital-after-childbirth




