திருவண்ணாமலை, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான பந்தல்கால் முகூர்த்த விழா இன்று காலை நடை பெற்றது. அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பு பந்தல்கால் நடப்பட்டது. மலையே சிவன் உலக புகழ் பெற்ற அண்ணாமலையார் கோவில் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது. இங்குள்ள மலையே சிவனாக அனைவரும் வணங்குகின்றனர். தென்னாடுடைய சிவனாய் எந்நாட்டவர்க்கும் இறைவனாய் சிவபெருமான் உள்ளதால் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையை வலம் வருவதற்கும் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் வெளிநாடு, வெளிமாநிலங்கள், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். கார்த்திகை தீபத்திருவிழா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழா முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த விழா 10 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். 10-ம் நாளில் நடைபெறும் தீப தரிசன விழாவில் சுமார் 40 முதல் 50 லட்சம் பக்தர்கல் அண்ணாமலையை வலம் வந்து தீபதரிசனத்தை பார்த்து வணங்கி செல்வார்கள். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 12-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி நிறைவு பெறுகிறது. பந்தல்கால் நடும் முகூர்த்த விழா கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பூர் வாங்க பணிகளுக்கான பந்தல்கால் நடும் முகூர்த்த விழா இன்று காலை நடைபெற்றது. பந்தல்கால் முகூர்த்த விழாவை முன்னிட்டு இன்று காலை அண்ணாமலையார் கோவி லில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு பந்தல் காலிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. அதன் பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க பந்தல் கால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பஞ்ச மூர்த்திகளின் தேர்களின் முன்பாகவும், முனீஸ்வரன் கோவில் முன்பாகவும் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. திரளான பக்தர்கள் வழிபட்டனர். பின்னர் அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை உச்சரிக்க பந்தல்கால் நடப்பட் டது. இதில் மாவட்ட கலெக்டர் வந்தனா கார்க், போளூர் எம்.எல்.ஏ. அபிஷேக், த.வெ.க. தெற்கு மாவட்ட செயலாளர் சு.பாரதிதாசன், சீத்தா சீனுவாசன், மாமன்ற உறுப்பினர் டாக்டர் பழனி, அண்ணாமலையார் கோவில் தக்கார் மீனாட்சி சுந்தரம், இணை ஆணையர் ஜெ.பரணிதரன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பெருமாள் நகர் கே.ராஜன், ரேடியோ ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/a-pavilion-was-erected-for-the-karthigai-deepa-festival-at-the-tiruvannamalai-temple




