கோவை, கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து சீரானதால், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பருவமழை கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்துக்குள்பட்ட சாடிவயல் பகுதியில் அமைந்துள்ள கோவை குற்றாலம் அருவிக்கு உள்ளூர் மக்கள் மட்டுமன்றி, வெளி மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த சூழலில், மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்த பருவமழை காரணமாக, அருவிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இதனால், அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்காலிகமாக மூடல் இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை தெரிவித்தது. ஆற்றில் நீர்வரத்து குறைந்து, பாதுகாப்பு சூழல் சீரடைந்த பின்னரே சுற்றுலாப் பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அருவிப்பகுதி மற்றும் வன எல்லைக்குள் அத்துமீறி யாரும் நுழைய வேண்டாம் என்றும் வனக்கோட்டம் வெளியிட்ட அறிவிப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அனுமதி இந்நிலையில் வெள்ளப்பெருக்கால் மூடப்பட்ட கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து சீரானதால், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-permitted-to-bathe-at-kovai-kutralam-falls




