டெல்லி, கொச்சி-குமரி-தூத்துக்குடி எரிவாயு குழாய் திட்டத்தில் ரூ. 2,449 கோடி முதலீடு செய்ய இந்தியன் ஆயில் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. கொச்சி - கன்னியாகுமரி - தூத்துக்குடி எரிவாயு குழாய் திட்டம் கேரளாவின் கொச்சியில் இருந்து தமிழ்நாட்டின் தூத்துக்குடி வரை 424.65 கி.மீ. நீளத்திற்கு இயற்கை எரிவாயு குழாய் அமைத்து, இயக்குவதற்காக 2,449 கோடி ரூபாய் முதலீடு செய்ய இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்:- கொச்சி - கன்னியாகுமரி - தூத்துக்குடி எரிவாயு குழாய் திட்டத்தின் வாயிலாக கொச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படும். இக்குழாய் வழியாக தினசரி 68.4 லட்சம் கன மீட்டர் எரிவாயுவை விநியோகிக்க முடியும். இதில், தினசரி 17.1 லட்சம் கன மீட்டர் அளவிலான திறன், பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்படும். இதன் வாயிலாக நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு மூன்றாம் தரப்பினரும் குழாயை பயன்படுத்த முடியும். இத்திட்டத்திற்கான ஒப்புதல் நேற்று நடைபெற்ற இயக்குநர் குழு கூட்டத்தில் வழங்கப்பட்டது. இந்த திட்டம் இந்தியாவின் தெற்கு கடலோர பகுதிகளில் இயற்கை எரிவாயு குழாய் கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன் கேரளாவில் உள்ள எரிவாயு கட்டமைப்பை தென்தமிழ்நாட்டின் தேவை மையங்களுடன் இணைக்கும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/kochi-kumari-thoothukudi-gas-pipeline-project-rs-2449-crore-investment-indian-oil-approval




