மதுரை, மீனாட்சி அம்மன் கோவிலில் வரும் 23ம்தேதி வரை கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் கடந்த 17ம் தேதி நடந்தது. கடந்த 6-ந்தேதி மகா கணபதி ஹோமத்தோடு நிகழ்ச்சி தொடங்கியது. தினமும் ஒரு மங்கல நிகழ்ச்சி நடைபெற்றது. 17ம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு யாகசாலை பூஜை நடந்தது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசங்கள் 4 ராஜகோபுரங்கள் உள்பட 12 கோபுரங்கள், விமானங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகு, சடங்குகளின்படி 7.40 மணிக்கு கோபுரங்களுக்கும், 8.10 மணிக்கு மூலவர் மீனாட்சி அம்மனுக்கும், 8.50 மணிக்கு சுந்தரேசுவரருக்கும் புனித நீரால் மகா கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் கூட்டம் கும்பாபிஷேகத்தின்போது மேல்தளத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அனும திக்கப்பட்டனர். கோவிலின் சுற்றுப்பகுதியில் உள்ள வீதிகளில் ஏராளமானவர்கள் திரண்டு தரிசித்தனர். சுவாமி, அம்மன் சன்னதிகளில் தரிசன அனுமதி தொடங்கியபின்பு, வீதிகள் எங்கும் அலைகடலாக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கட்டண தரிசனம் ரத்து மகா கும்பாபிஷேக நிகழ்வுக்காக கோவில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து விரிவான முன்னேற்பாடுகளை செய்திருந்தன. பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்யும் வகையில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதன்படி செப்டம்பர் 17ம் தேதி முதல் 20-ம் தேதி (இன்று) வரை அனைத்து வரிசைகளிலும் இலவச தரிசனம் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் மீனாட்சி அம்மனையும், சுந்தரேசுவரரையும் தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வரும் புதன்கிழமை (செப்.23ம்தேதி) வரை கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/paid-darshan-at-madurai-meenakshi-amman-temple-cancelled-until-the-23rd




