புதுடெல்லி, சாவர்க்கர் குறித்த கருத்துக்காக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வெறுப்பு பேச்சு வழக்கை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்டு. ராகுல் காந்தி விமர்சனம் சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதித் தந்துவிட்டு, அவரிடமிருந்து ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு அவர்களின் சேவகராக செயல்பட்டதாக ராகுல் காந்தி விமர்சனம் செய்து இருந்தார். ராகுலின் சாவர்க்கர் குறித்த பேச்சுகள் அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் பெரிய சர்ச்சையானது. இது தொடர்பாக, ராகுல் காந்தி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி, உ.பி.,யை சேர்ந்த நிருபேந்திர பாண்டே என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யவும், அவருக்கு சம்மன் அனுப்பவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, அலகாபாத் ஐகோர்ட்டில் ராகுல் காந்தி மேல் முறையீடு செய்தார். வழக்கு ரத்து அதை அலகாபாத் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இது குறித்து சுப்ரீம்கோர்ட்டில் ராகுல் மனு தாக்கல் செய்தார். இந்தநிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளதா என்று நீதிபதி தத்தா கேட்டார். மாநில அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் நடராஜ், அனுமதி வழங்கப்படவில்லை என கூறினார். இதையடுத்து உரிய அனுமதி பெறாததால் ராகுலுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் நாகு ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்தது. ராகுல் மீது குற்றவியல் நடவடிக்கைகளை தொடர சட்டப்படி அனுமதி தேவை என்று சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/சாவர்க்கர்-குறித்து-பேச்சு-ராகுல்-மீதான-வழக்கை-ரத்து-செய்தது-சுப்ரீம்-கோர்ட்டு-talk-about-savarkar-supreme-court-quashes-case-against-rahul




