புது டெல்லி, நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது. ஆகஸ்டு 15-ந்தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது. அரசியல் அமைப்பு திருத்தம் மொத்தம் 19 அமர்வுகள் உள்ள இந்த கூட்டத் தொடரில் அரசியல் அமைப்பு திருத்தம் தேவைப்படும் பல முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதனால் நாடாளுமன்றத்தில் கடும் விவாதங்கள், அமளி ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து கட்சி கூட்டம் இந்த நிலையில் கூட்ட தொடருக்கு முன்பு அனைத்து கட்சி கூட்டம் 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெற கூட்டத் தொடருக்கு ஒரு நாள் முன்பு அனைத்து கட்சி கூட்டம் வழக்கமாக நடை பெறும். அதே மாதிரி தற்போது நடைபெற உள்ள மழைக் கால கூட்டத் தொடருக்காக மத்திய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/parliament-monsoon-session-all-party-meeting-on-the-19th




