புதுடெல்லி, நாடாளுமன்ற மக்களவையில் அருண் நேரு எம்.பி. எழுப்பியுள்ள கேள்விக்கு பதில் அளித்து மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் பெரம்பலூர் வழியாக நாமக்கல்-அரியலூர் இடையே புதிய ரெயில் பாதை அமைப்பது குறித்த விரிவான செயல்திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. விரிவான செயல்திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்ட பிறகு மாநில அரசுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு நிதி ஆயோக், மத்திய நிதியமைச்சகம் ஆகியவற்றின் மதிப்பீட்டு ஒப்புதலுக்குப் பிறகு முறையான அனுமதி வழங்கப்படும். தமிழ்நாட்டில் ரெயில்வே பணிகளுக்காக கடந்த 2009 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலத்தில் ஆண்டொன்றுக்கு ரூ.879 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்த நிலையில், 2026-27-ம் நிதியாண்டில் 8 மடங்கு அதிகரிக்கப்பட்டு ரூ.7 ஆயிரத்து 611 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் 1-ந் தேதி 8 புதிய ரெயில் வழித்தடங்கள், 3 அகல ரெயில் பாதையாக மாற்றும் திட்டங்கள், 8 இரட்டை வழிப்பாதை என ஆயிரத்து 874 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.27 ஆயிரத்து 282 கோடி மதிப்பில் 19 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் மணலூரில் 474.3 ஏக்கர் பரப்பளவில் ரூ.587.47 கோடி திட்ட மதிப்பிலும், பிள்ளைப்பாக்கத்தில் 379.3 ஏக்கர் பரப்பளவில் ரூ.424.55 கோடி திட்ட மதிப்பிலும் 2 பெரிய மின்னணுப் பொருட்கள் உற்பத்தி மையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/approval-for-namakkal-ariyalur-new-railway-line-ashwini-vaishnaw




