சென்னை, தாம்பரத்தில் இருந்து கோவை போத்தனூருக்கு வரும் 25ம் தேதி இரவு 11 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- வார இறுதி நாட்களில் ஏற்படும் கூடுதல் பயணிகள் நெரிசலைக் குறைப்பதற்காக, பின்வரும் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது ரெயில் எண் 06025 தாம்பரம் - போத்தனூர் ஒரு வழி விரைவு சிறப்பு ரெயில்: ரெயில் எண் 06025 தாம்பரம் - போத்தனூர் ஒரு வழி விரைவு சிறப்பு ரெயில், 25 செப்டம்பர் 2026 (வெள்ளிக்கிழமை) அன்று இரவு 23:00 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9:00 மணிக்கு போத்தனூரை சென்றடையும் (1 சேவை). பெட்டிகளின் அமைப்பு: 1 - குளிர்சாதன வசதி கொண்ட முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு (AC First Class cum AC Two Tier) கலப்புப் பெட்டி, 14 - படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் (Sleeper Class), 4 - பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் மற்றும் 2 - சரக்கு மற்றும் பிரேக் வேன்கள் (Luggage cum Brake Vans). ரெயில் எண் 06025 தாம்பரம் - போத்தனூர் ஒரு வழி விரைவு சிறப்பு ரெயிலின் நேரம் மற்றும் நிறுத்தங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு (நேரம் 24 மணிநேர அடிப்படையில்):- மேற்கூறிய சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு, தெற்கு ரெயில்வே தரப்பில் 24.09.2026 (நாளை) அன்று காலை 8 மணிக்குத் தொடங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-to-run-from-tambaram-to-coimbatore-podanur-on-the-25th




