சென்னை, சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை, ரூ. 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். சென்னை ஐயப்பந்தாங்கல் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் முகமது கரீம். இவர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு சென்றுள்ளார். நகை, பணம் கொள்ளை ஆம்பூரில் இருந்து மீண்டும் நேற்று ஐயப்பந்தாங்கலுக்கு வந்துள்ளார். ஐயப்பந்தாங்களில் உள்ள தனது வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பின்னர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு அறையில் உள்ள பீரோவில் வைக்கப்பட்டிருந்த 25 சவரன் நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று 25 சவரன் நகை, ரூ. 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடுத்து சென்ற கொள்ளை கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-house-lock-broken-25-sovereign-jewellery-cash-robbery




