இந்த வார விசேஷங்கள் இந்த வாரத்தின் சிறப்பு ஆன்மிக நிகழ்வுகள், முக்கிய பண்டிகைகள், வழிபாடுகள், சேவைகள், சிறப்பு நிகழ்வுகள் வருமாறு: ஆகஸ்ட் 25-ந் தேதி (செவ்வாய்) * பிரதோஷம் * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் விறகு விற்ற திருவிளையாடல். * விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் ரத உற்சவம். * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். * மேல்நோக்கு நாள். 26-ந் தேதி (புதன்) * ஓணம் பண்டிகை. * சிரவண விரதம். * நெல்லை குறுக்குத் துறை சுப்பிரமணியர் ரத உற்சவம். * சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு. * மேல்நோக்கு நாள். 27-ந் தேதி (வியாழன்) * பவுர்ணமி. * ஆவணி அவிட்டம். * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தீர்த்தவாரி. * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். * மேல்நோக்கு நாள். 28-ந் தேதி (வெள்ளி) * வரகூர் உறியடி உற்சவம் ஆரம்பம். * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் பவனி. * திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை. * மேல்நோக்கு நாள். 29-ந் தேதி (சனி) * திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம். * கீழ்நோக்கு நாள். 30-ந் தேதி (ஞாயிறு) * நாங்குநேரி உலகநாயகி அம்மன் வருசாபிஷேகம். * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம். * திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல். * மேல்நோக்கு நாள். 31-ந் தேதி (திங்கள்) * முகூர்த்த நாள். * சங்கடகர சதுர்த்தி. * திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி உற்சவம் ஆரம்பம். * பெருவயல் முருகப்பெருமான் விழா தொடக்கம். * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். * சமநோக்கு நாள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/devotional/aanmigam-this-weeks-special-events-25th-august-2026-to-31th-august-2026




