தூத்துக்குடி, நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நீட் தேர்வு, மாணவர்கள் போராட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சரத்குமார் பேசியதாவது, மாணவர்களுக்கு நீட் தேர்வு அவசியம். காவல்துறையில் சேர்வதற்குக்கூட தகுதி உள்ளதா? இல்லையா? என்று கண்டுபிடிப்பதற்காக பயிற்சிகளுக்கு செல்கிறார்கள், சோதனைகள் செய்கிறார்கள். நீட் மூலமாக கல்லூரிகளில் நன்கொடை வசூல் தடுக்கப்படுகிறது. மாணவர்கள் கல்லூரிகளில் நேரடியாக சேரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் 13 முறை வினாத்தாள்கள் கசிந்துள்ளன. வினாத்தாள் கசிவு நடக்காத சம்பவம் கிடையாது. ஆனால், இப்போதும் நடந்துள்ளது. மே மாதம் வினாத்தாள் கசிந்த நிலையில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். ஜுன் மாதம் மறுதேர்வு நடைபெற்றது. நீட் தேர்வை தற்போது 23 லட்சம் பேர் எழுதுகின்றனர். மருத்துவ இடங்கள் 1.50 லட்சம் மட்டுமே உள்ளன. இந்த கடுமையான போட்டியில் தேர்வு எழுதுகின்றனர். நீட் தேர்வு இருக்கக்கூடாது என கூறுவது நியாயமில்லை. இந்த போராட்டத்தில் வெளிநாட்டு சதிக்கு உள்பட்டு இளைஞர்கள் சென்றுவிடக்கூடாது. இந்த போராட்டத்தின் மூலம் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ள நிலையில் அதை சீர்குலைக்கும் எண்ணம் உள்ளதா? என்ற ஐயப்பாடு எழுகிறது. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/neet-is-necessary-for-students-r-sarathkumar




