மண்டியா, கர்நாடகாவில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்த 68 வயது மூதாட்டி உயிரிழந்த நிலையில், அவரது வீட்டில் 30-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் ரூ.8.4 லட்சம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 30-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் பணம் மண்டியாவில் உள்ள ஒரு மசூதியின் வாசலில் யாசகம் பெற்று வந்தவர் 68 வயதான மூதாட்டி. இவர் தனது சகோதரியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவரது சகோதரி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், மூதாட்டி மட்டும் அங்கு வசித்து வந்தார். இந்நிலையில், வயது முதிர்வு காரணமான உடல்நலக் குறைவால் மூதாட்டி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது வீட்டை சோதனையிட்டபோது, 30-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் ரூ.8.4 லட்சம் ரொக்கப்பணம் சேமித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. சகோதரர்களிடம் ஒப்படைப்பு மூதாட்டிக்கு திருமணம் ஆகாத நிலையில், அவரது சகோதரர்களிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. இதில் ஒரு சகோதரர் ரூ.6 லட்சத்தை பெற்றுக்கொண்டார். மற்றொரு சகோதரர் தனக்கு கிடைத்த ரூ.2.4 லட்சத்தை அங்குள்ள மசூதிக்கு நன்கொடையாக வழங்கியதாக கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/she-begged-for-years-after-her-death-rs-84-lakh-found-at-her-home




