நீலகிரி, நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட சேரம்பாடி, சோலாடி, கண்ணம்பள்ளி, கோரஞ்சால், சப்பந்தோடு, புஞ்சகொல்லி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வாழை, தென்னை, பாக்கு மரங்கள், பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் பொதுமக்கள், மாணவர்களை விரட்டி வருகிறது. காட்டு யானைகள் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் சேரம்பாடியில் இருந்து பந்தலூர் செல்லும் சாலையில் 5 காட்டு யானைகள் முகாமிட்டது. அந்த வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்தது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து காட்டு யானைகள் காப்பி காடு பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தன. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் சஞ்சீவி, வனவர் முத்தமிழ் மற்றும் வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டினர். இதேபோல் அய்யன்கொல்லி அருகே தட்டாம்பாறை, கருத்தாடு, கோட்டப் பாடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 8 காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதை அறிந்த வனத்துறையினர் யானைகளை விரட்டினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-wild-elephants-run-amok-after-entering-a-tea-estate




