பெங்களூரு, கர்நாடகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நடந்தது. இதில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 1.05 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. தற்போது வரைவு வாக்காளர் பட்டியலில் 4 கோடியே 46 லட்சத்து 413 வாக்காளர்கள் உள்ளனர். நோட்டீஸ் இதில் ஆண் வாக்காளர்கள் 2.21 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 2.24 கோடி பேரும், 2 ஆயிரத்து 874 பேர் மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். 43 லட் சத்து 81 ஆயிரத்து 760 வாக்காளர்களுக்கு ஆதாரம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர்களின் பெயர்களில் முரண்பாடுகள் இருப்பதால் இந்த நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இதில் இதுவரை 24 லட்சத்து 97 ஆயிரத்து 75 வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 18 லட்சத்து 84 ஆயிரத்து 685 பேருக்கு இன்னும் நோட்டீஸ் அனுப்பப்படவில்லை. அதாவது 56.99 சதவீதம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்பியதில் 7 லட்சத்து 3 ஆயிரத்து 710 பேர் ஆதாரங்களை வழங்கியுள்ளனர். இந்த முரண்பாடுகள் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. விசாரணை நோட்டீஸ் குறித்து இன்று விசாரணை நடக்கிறது. அடுத்த விசாரணை வருகிற 22-ந் தேதி நடத்தப்பட உள்ளது. 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் கண்டுபிடிக்க முடியாதவர்கள் தற்போது அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவேற்றம் செய்து விவரங்களை பெறலாம் என்று கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/sir-operation-notices-issued-to-2497-million-voters-in-karnataka-so-far



