வந்தவாசி, வந்தவாசி அருகே சாலையோர தடுப்பு மீது மோட்டார்சைக்கிள் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த சுனில் குமார் மகன் கிருத்திக் (வயது 20). இவர் சென்னை வி.ஐ.டி. கல்லூரியில் படித்து வந்தார். சென்னை எம்.எம்.டி.ஏ. காலனியைச் சேர்ந்த மோகன் மகன் பிரியதர்ஷன் (20). இவர் தஞ்சையில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். விபத்து நண்பர்களான இருவரும் திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த பருவதமலை கோவிலுக்கு சென்று விட்டு மோட்டார்சைக்கிளில் நேற்று பிற்பகல் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் வந்தவாசி-சேத்துப்பட்டு சாலை, ஏந்தல் கூட்டுச் சாலை அருகே வந்தபோது இவர்களுக்கு முன்னால் மோட்டார்சைக்கிளில் சென்றவர் திடீரென வலதுபுறம் திரும்பியுள்ளார். இதனால் நிலைதடுமாறியதில் இவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் சாலையோர தடுப்பு வேலி மீது மோதி விபத்துக்குள்ளானது. போலீசார் இதில் பலத்த காயமடைந்த கிருத்திக், பிரியதர்ஷன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். தகவலறிந்த வடவணக்கம்பாடி போலீசார் அங்கு சென்று இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வடவணக்கம்பாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-strikes-on-return-to-chennai-2-students-die-in-motorcycle-accident




