தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாமாண்டு தொடக்க விழாவில் முருகனாக விஜய்யைப் புகழ்ந்து பாடிய பாடகர் வேல்முருகனுக்கு, தவெக அரசு கௌரவம் அளித்துள்ளது. பத்து லட்சத்துக்கு அதிகமாக வருமானம் வரும் கோவில்களின் அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்யும் குழுவில் ஒரு உறுப்பினராக அவரை நியமித்துள்ளது தவெக அரசு. தமிழ்நாடு முழுக்க இந்து அறநிலையத்துறையின் கீழ் வரும் கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமனத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சில தினங்களுக்கு முன் தமிழக அரசு அறிவித்தது நினைவிருக்கலாம். விஐபிக்கள் மற்றும் கட்சிக்காரர்கள் பலரும் இந்தப் பதவிக்கு முட்டி மோதிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அறங்காவலர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஒரு குழுவை நியமித்து இன்று உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசு. விஜய் மேடையில் வேல்முருகன் சினிமா தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஆன்மிக பேச்சாளர் சுமதிஸ்ரி உள்ளிட்டோர் அடங்கிய அந்தக் குழுவில் பாடகர் வேல்முருகனும் இடம்பெற்றுள்ளார். இது குறித்து அவரிடமே பேசினோம். ''எளியவனான எனக்கு அரசாங்கத்துல அதுவும் அறநிலையத்துறையில் கிடைச்சிருக்கிற இந்தப் பொறுப்புங்கிறது பெரிய அங்கீகாரம். தமிழக வெற்றிக் கழக அரசுக்கு அதுக்காக என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிச்சுக்கிடுறேன். அந்த வேலைக்கு நேர்மையா என்ன செய்யணுமோ அதை நிச்சயம் செய்வேன்''' என்கிறார் அவர். தவெக மேடையில் விஜய்யை முருக கடவுளாகப் பாவித்து இவர் பாடியதாக அப்போது சிலர் போலீஸில் புகார் அளித்தது நினைவிருக்கலாம். 'பிகில், கோட் பட தயாரிப்பாளருக்கு புதிய அரசு பதவி வழங்கிய முதல்வர் விஜய்!' - விவரம் என்ன? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/singer-velmurugan-appointed-as-a-member-in-tn-hr-ces-trustee-searching-committee




