சென்னை, இடைத்தேர்தல் நடைபெற உள்ள தாராபுரம் தொகுதியில் வரும் 30ம் தேதி முதல்-அமைச்சர் விஜய் பிரசாரம் மேற்கொள்கிறார். இடைத்தேர்தல் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி), திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) ஆகிய 2 தனித் தொகுதிகளுக்கும் வருகிற அக். 6 ஆம் தேதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, அக். 9 ஆம் தேதியில் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த செப். 9 ஆம் தேதியில் தொடங்கி செப். 16 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த இடைத்தேர்தலில் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், நா.த.க. என ஐந்துமுனைப் போட்டி நிலவுகிறது. மதுராந்தகம் இந்த சூழலில், முதல்-அமைச்சரும், த.வெ.க. தலைவருமான விஜய், மதுராந்தகத்தில் செப்.25 மற்றும் அக்.2ஆம் தேதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதன்படி, செப்.25இல் மதுராந்தகம் தொகுதி அச்சரப்பாக்கத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்று உரையாற்றுகிறார் என்றும், அக்.2ஆம் தேதி மதுராந்தகத்தில் சாலைவலம் செல்லும் முதல்-அமைச்சர் விஜய் வாகனத்தில் இருந்தபடியே பிரசாரம் மேற்கொள்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தாராபுரம் இந்நிலையில் தாராபுரம் தொகுதியில் வரும் 30ம் தேதி முதல்-அமைச்சர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் தாராபுரம் மாருதி நகர் பகுதியில் 54 ஏக்கரில் பொதுக்கூட்டத்திற்கான பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-will-campaign-in-the-dharapuram-constituency-on-the-30th




