சேலம், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், ரெயில்வே நிர்வாகம் முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில், தாம்பரத்தில் இருந்து சேலம் வழியாக போத்தனூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, தாம்ப ரம்-போத்தனூர் சிறப்பு ரெயில் (06025) இன்று (வெள்ளிக்கிழமை) தாம்பரத் தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் சென்னை எழும் பூர், பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் காலை 5 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர், சேலத் தில் இருந்து காலை 5.03 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக காலை 9 மணிக்கு போத்தனூர் சென்றடையும். இத்தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-tambaram-and-podanur




