கொல்கத்தா, மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தின் கல்டலியை சேர்ந்த காஷ்மிரா ஷேக் (வயது 36) என்பவர் பட்டு சேலையில் ஜரிகை போடும் தொழில் செய்து வருகிறார். அவரது கணவர் பை தைத்து மனைவி மற்றும் 3 குழந்தைகளை பராமரித்து வருகிறார். ஏழை தொழிலாளியான காஷ்மிரா பஞ்சாப் நேஷனல் வங்கியின் கல்டலி கிளையில் கணக்கு வைத்துள்ளார். ஏற்கனவே தனது வீட்டுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவு செய்திருந்த அவர், அதற்கான மானியம் தனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா? என்று பார்ப்பதற்காக கடந்த 1-ந்தேதி வங்கிக்கு சென்றார். அங்கே அவரது வங்கி கணக்கை பார்த்தபோது. பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தார். ஏனெனில் அவரது வங்கி கணக்கில் ரூ.99,99,99,997 இருந்தது. ரூ.100 கோடிக்கு வெரும் 3 ரூபாய் மட்டுமே குறைவாக இருந்தது. அன்றாட செலவுக்கே அல்லாடும் தனக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது? என்று தெரியாமல் அதிர்ந்த காஷ்மிரா, இது குறித்து வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்களும், காஷ்மிராவின் வங்கி கணக்கை உடனடியாக முடக்கி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் ரூ.100 கோடி இருக்கும் தனது வங்கி கணக்கில் இருந்து, ஜரிகை தொழிலுக்காக கிடைக்கும் சம்பளத்தை கூட எடுக்க முடியாத நிலைக்கு தற்போது காஷ்மிரா தள்ளப்பட்டு உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/rs-100-crores-received-in-the-bank-account-of-a-female-worker-as-a-cooking-gas-subsidy




