தென்காசி, தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 2024-ம் ஆண்டு பயின்ற கேரளாவைச் சேர்ந்த மாணவிக்கு, கல்லூரியில் தாளாளரான பினு என்பவர் தொடர்ந்து பல்வேறு வகையில் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவி தனது ஆண் நண்பருடன் பேசியதை வீட்டில் கூறிவிடுவேன் என்றும் அவர் மிரட்டியதாக தெரிகிறது. இது குறித்து மாணவி தரப்பில் முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் தென்காசி மகளிர் காவல்நிலைய போலீசார், கல்லூரி தாளாளர் பினு மீது பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், காவல் நிலையத்தில் வைத்து நெஞ்சு வலிப்பதாக கூறியதால், பினுவை தென்காசி அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-private-college-correspondent-arrested-following-complaint-of-repeated-harassment-of-a-female-student




