உலக ஜூனியர் தடகள போட்டியின் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் ஆஷிஷ் யாதவ் வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்திய வீரர் ஆஷிஷ் அசத்தல் உலக ஜூனியர் (20 வயதுக்கு உட்பட்டோர்) தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் யுஜின் நகரில் நடந்து வருகிறது. இதில் 147 நாடுகளை சேர்ந்த 1,858 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதன் 3-வது நாளில் நடந்த ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் 12 வீரர்கள் களம் கண்டனர். இந்திய வீரர் ஆஷிஷ் யாதவ் தனது 3-வது முயற்சியில் 74.09 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கத்தை சொந்தமாக்கினார். நடப்பு தொடரில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவாகும். தகுதி சுற்றில் முதலிடம் பிடித்த தென்ஆப்பிரிக்க வீரர் ஜான் ஹென்ரிக் ஹெய்மன்ஸ் தொடக்கத்தில் இருந்தே முன்னிலை வகித்ததுடன் 6-வது மற்றும் கடைசி வாய்ப்பில் 80.50 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். டொமினிகா நாட்டு வீரர் அட்டிசன் ஜேம்ஸ் 73.89 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப்பக்கம் பெற்றார். மற்றொரு இந்திய வீர ரான தமிழகத்தை சேர்ந்த தரணிதரன் (72.35 மீட்டர்) 6-வது இடம் பெற்றார். 2-வது இந்திய வீரர். வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியதன் மூலம் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 19 வயதான ஆஷிஷ் யாதவ், உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதலில் பதக்கம் வென்ற 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டில் இந்திய நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 86.48 மீட்டர் தூரம் எறிந்து உலக ஜூனியர் சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கத்தை வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நீளம் தாண்டுதல் தகுதி சுற்றில் இந்திய வீரர்கள் ஷாநவாஸ் கான் (7.73 மீட்டர்) 5-வது இட மும், ஜிதின் அர்ஜூனா (7.57 மீட்டர்) 12-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர். 400 மீட்டர் ஓட்டத்தில் ஜூனியர் தேசிய சாதனை படைத்து (45.81 வினாடி) அரைஇறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர் முகமது அஷ்பாக் இறுதிப்போட்டியில் 46.20 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து 8-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். அமெரிக்க வீரர்கள் ஜெய்டன் டிலோன் (44.47 வினாடி) புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கமும். குயின்சி வில்சன் (44.62 வினாடி) வெள்ளிப்பதக்கமும் அறுவடை செய்தனர். தென்ஆப்பிரிக்க வீரர் லீன்டெர்ட் (44.96 வினாடி) வெண்கலப்பதக்கம் வென்றார். பூஜா இறுதிப்போட்டிக்கு தகுதி பெண்களுக்கான உயரம் தாண்டுதல் தகுதி சுற்றில் இரு பிரிவிலும் 1.79 மீட்டர் தாண்டிய 14 வீராங்கனைகள் இறுதி சுற்றுக்கு முன்னேறினர். இதில் இந்திய வீராங்கனை பூஜாவும் அடங்குவார். அரியானாவை சேர்ந்த 19 வயதான பூஜா 1.93 மீட்டர் உயரம் தாண்டி சீனியர் பிரிவில் தேசிய சாதனையாளராக விளங்குகிறார். ஈட்டி எறிதல் தகுதி சுற்றில் இந்திய வீராங்கனை பூனம் (48.81 மீட்டர்) தனது பிரிவில் 8-வது இடமும், ஒட்டுமொத்தத்தில் 13-வது இடமும் பெற்று இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து வெளியேறினார். SILVER FOR INDIA! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/othersports/world-u20-championships-ashish-yadav-wins-silver-medal




