தூத்துக்குடி, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் லைட்டர்களின் ஊடுருவலால் ஆண்டுக்கு ரூ.600 கோடி அளவிலான தீப்பெட்டி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் விஜய் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் இதுகுறித்து கூறியதாவது: நூற்றாண்டு பழமையான தீப்பெட்டி தொழிலுக்கு பிளாஸ்டிக் லைட்டர்கள் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. ரூ.20-க்கும் குறைவான விலையுள்ள பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து, தற்போது அதன் உதிரிபாகங்கள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு உள்ளூரிலேயே தயாரிக்கப்படுகின்றன. ரூ.600 கோடி தீப்பெட்டி வர்த்தகம் பாதிப்பு இவை தரம் குறைந்ததாகவும், பாதுகாப்பற்றதாகவும், மண்ணில் மக்காததாகவும் உள்ளன. தீப்பெட்டித் தொழிலில் 80 சதவீதம் பெண் தொழிலாளர்களே பணிபுரிகின்றனர். பிளாஸ்டிக் லைட்டர்களின் வரவால் ஒரு ஆண்டுக்கு சுமார் 25 சதவீதம், அதாவது ரூ.600 கோடி அளவிலான தீப்பெட்டி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து மனு ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு முழுமையான தடை விதிக்க வலியுறுத்தி தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து மனு அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அரசின் முறையான ஆதரவு கிடைத்தால் தீப்பெட்டி உற்பத்தியைப் பெருக்குவதுடன், வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது சங்க செயலாளர் வரதராஜன், பொருளாளர் ராஜவேல், துணைத்தலைவர் அம்புரோஸ், நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க முன்னாள் செயலாளர் சேதுரத்தினம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/plastic-lighters-are-costing-the-matchbox-trade-by-rs-600-crore-annually-manufacturers-concerned




