சேலம், சேலம் அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கதிரவன். கூலித்தொழிலாளி. இவர், தனது தந்தை பெயரில் உள்ள வீட்டை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய முடிவு செய்தார். அதற்காக அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் உள்ள நில அளவையர் பிரிவில் விண்ணப்பம் செய்திருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த நில அளவையர் முருகேசன், பட்டா வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கதிரவன், இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கதிரவனிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரத்தை நில அளவையரிடம் கொடுக்குமாறு கூறி போலீசார் அனுப்பினர். நேற்று காலை அவர் அம்மாப்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் கதிரவன், ரூ.5 ஆயிரத்தை நில அளவையர் முருகேசன் மற்றும் அவரால் நியமிக்கப்பட்டிருந்த புரோக்கர் பூவரசன் ஆகியோரிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் 2 பேரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/surveyor-arrested-for-rs-5000-bribe-in-patta-transfer-broker-held




