புதுடெல்லி, நீட் தேர்வு உள்பட பல்வேறு தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் போராட்டம் நேற்று முன்தினம் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது போராட்டக்காரர்களை கலைக்க டெல்லி போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மூன்றாவது நாளாக இன்றும் ஜந்தர் மந்தரில் மாணவர்கள் குவிந்திருந்தனர். இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 16 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. அடுத்த உத்தரவு வரும் வரை டெல்லியில் 16 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 16 ரெயில் நிலையங்கள் இதன்படி 1. லோக் கல்யாண் மார்க், 2. ராஜீவ் சௌக், 3. படேல் சௌக், 4. ராமகிருஷ்ணா ஆசிரமம் மார்க், 5. பாரகம்பா சாலை, 6. உச்ச நீதிமன்றம் (Supreme Court), 7. சேவா தீர்த்த், 8. ஜன்பத், 9. மண்டி ஹவுஸ், 10. சென்ட்ரல் செக்ரடேரியட், 11. ITO, 12. டெல்லி கேட், 13. இந்திரபிரஸ்தா, 14. கான் மார்க்கெட், 15. ஜோர் பாக், 16. சிவாஜி ஸ்டேடியம் ஆகிய நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. மீண்டும் திறப்பு இந்நிலையில் டெல்லியில் அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களும் தற்போது பயணிகள் சேவைக்காக திறக்கப்பட்டுள்ளன. டெல்லியில் இளைஞர்கள் போராட்டம் காரணமாக பல மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்ட நிலையில், டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/dmrc-reopens-entry-gates-at-mandi-house-and-central-secretariat-metro-stations




