திருச்செந்தூர், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக, சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் கடற்கரை அருகில் அமைந்துள்ளதாலும் நாள் தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சாமி தரிசனம் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். உதயமார்த்தாண்ட அபிஷேகம் பக்தர்கள் வாகனங்கள் வருகையால் திருச்செந்தூர் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வாகனங்கள் தெப்பக்குளம் அருகில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் சாலையில் இரு பக்கமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஞாயிறு விடுமுறை நாளான இன்று வழக்கம் போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-devotees-wait-for-5-hours-at-tiruchendur-temple-to-have-darshan-2




