ஒரு விஷயம் செய்யவேண்டும் என்று நினைத்தால் எப்படியாவது அதை நடத்தி காட்டிவிடுவேன் என்று நடிகை மிருணாள் தாக்கூர் தெரிவித்துள்ளார். பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான மிருணாள் தாக்கூர், தெலுங்கிலும் படங்கள் நடித்து வருகிறார். விரைவில் தமிழ் சினிமாவிலும் காலடி எடுத்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மிருணாள் தாக்கூர் அவரைப் பற்றி கூறிய விஷயங்கள் கவனம் ஈர்த்துள்ளன. பிடிவாதக்காரி “எல்லோருக்கும் தன்னிடம் ஒரு குணநலன் பிடிக்கும். ஒரு விஷயம் பிடிக்காது. அப்படி என்னிடம் எனக்கே பிடித்த விஷயம், பிடிவாதம்தான். ஒரு விஷயம் செய்யவேண்டும் என்று நினைத்தால் எப்படியாவது அதை நடத்தி காட்டிவிடுவேன். அந்த வகையில் நான் ஒரு பிடிவாதக்காரி. அது என்னுடன் பழகும் அத்தனை பேருக்கும் தெரியும். இளகிய மனது அதேவேளை எளிதாக மன்னித்து விடுவது என் பலவீனம் என்றே சொல்வேன். யாராவது ஏமாற்றினால் கூட அதை என்னால் கண்டுபிடிக்க முடியாது. அந்தவகையில் என் இளகிய மனதுதான் எனக்கே என்னிடம் பிடிக்காத விஷயமாகும்", என்று மிருணாள் தாக்கூர் குறிப்பிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/if-i-decide-to-do-something-i-will-somehow-make-it-happen-mrunal-thakur




