'நீட்' வினாத்தாள் முறைகேடுக்கு எதிராக டெல் லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி போராட்டம் தொடங்கினர். அந்த அமைப்பின் தலைவர் அபிஜீத் தீப்கே தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த இந்த போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், மாணவர் களும் பங்கேற்றனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு உள் பட நாடு முழுவதும் களத்தில் குதித்தனர். நாளாக நாளாக போராட்டம் வீரியம் எடுத்தது. இளைஞர்களின் போரட்டத்தையடுத்து தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். வழக்குப்பதிவு செய்யக் கூடாது அதேபோல போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளையும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் முன்வைத்து இருந்தனர். இந்த நிபந்தனைகளையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டதால் போராட்டம் கைவிடப்படுவதாக கூறப்பட்டது. இந்த நிலையில், போராட்டக்காரர்களை டெல்லி காவல்துறை கைது செய்வதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது. விடுதலை செய்ய வேண்டும் இது தொடர்பாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி கூறியதாவது; "வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் எனவும், கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்; போராட்டக்காரர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/we-will-stage-protests-again-karappan-janata-party-warns-the-central-government




