நடிகர் தனுஷ் சென்னை சாலிகிராமத்தில் தான் படித்த பள்ளிக்கு தனது சொந்த செலவில் 3 தளங்கள் கொண்ட கட்டடத்தைக் கட்டித் தந்திருக்கிறார். அந்தக் கட்டடத்திற்கு 'தனுஷ் பிளாக்' எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். Dhanush - Thai Sathya School இந்தக் கட்டட திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தத் திறப்பு விழாவில் தனுஷ், அவருடைய சகோதரிகள், பேட்ச் மாணவர்கள், அவருடைய கிளாஸ்மேட்டும் ஒளிப்பதிவாளருமான ஏ.குமரன் ஆகியோர் கலந்துகொண்டனர். Dhanush: "தாய் மொழி தெரியவில்லை என்றால் அது அவமானம்தான்" - நடிகர் தனுஷ் திறப்பு விழாவில் மாணவர்களிடம் பேசிய தனுஷ், "காலையில் இருந்து மாலை வரை கைதி மாதிரி ஒரே இடத்தில் இருக்கிறோமே என்று ஸ்கூலுக்கு வரும்போதெல்லாம் நினைப்பேன். எப்போது 3.30 மணி ஆகும், ஸ்கூலை விட்டு போகலாம் என்றுதான் தோன்றும். மணி அடித்தால் ஒரு தனி சந்தோஷமாக இருக்கும். ஸ்கூல் முடிந்ததும் முதல் ஆளாக நான்தான் வெளியே செல்வேன். அப்படி நான் போகும்போதெல்லாம் தெரியவில்லை, இங்கு இருப்பது தான் சந்தோஷமான நாள்கள் என்று. Dhanush - Thai Sathya School உங்கள் எல்லோருக்கும் ஒன்று சொல்கிறேன். ஸ்கூலில் இருக்கக்கூடிய நாள்கள் தான் மிகவும் சந்தோஷமான நாள்கள். எப்போது ஸ்கூல் முடியும் என்று கடந்து சென்று விடாமல் என்ஜாய் செய்யுங்கள். இந்த மாதிரி எனக்கு யாராவது சொல்லி இருந்தால் ஸ்கூலில் இருந்த ஒவ்வொரு தருணத்தையும் நான் என்ஜாய் செய்திருப்பேன்" என்று பேசியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://cinema.vikatan.com/kollywood/dhanush-sharings-about-his-school-days




