பழனி, அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு பக்தர்கள் எளிதாக மலைக்கோவில் செல்ல 3 மின் இழுவை ரெயில் மற்றும் ரோப் கார் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 3-வது மின் இழுவை ரெயிலில் பராமரிப்பு பணி கடந்த 13-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி 3-வது மின் இழுவை ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. அந்த ரெயிலில் இருந்த பழைய ரோப் அகற்றப்பட்டது. பின்னர் ரூ.6 லட்சம் செலவில் புதிய ரோப் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டு பொருத்தும் பணி நடந்தது. அது நிறைவடைந்து மின் இழுவை ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டத்துக்கு பிறகு நேற்று மதியம் சிறப்பு பூஜை நடைபெற்று மீண்டும் பக்தர்கள் சேவையை தொடங்கியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-work-on-the-third-funicular-railway-at-palani-murugan-temple-completed




