மத்திய தேர்தல் கமிஷன் நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் திருத்தத்தை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு வாக்காளர் திருத்தம் மூலம் 13 கோடி வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு நாடு தழுவிய அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இப்பிரச்னை சுப்ரீம் கோர்ட் வரை சென்றுள்ளது. தற்போது எஸ்.ஐ.ஆர் எனப்படும் சிறப்பு வாக்காளர்கள் திருத்தம் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதால் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து சிறப்பு வாக்காளர் திருத்தத்தில் நீக்கப்பட்டவர்கள், விடுபட்டவர்கள் மற்றும் 18 வயதை கடந்த புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியை தேர்தல் கமிஷன் மீண்டும் தொடங்கி இருக்கிறது. தலைமை தேர்தல் கமிஷனர்கள் மாநில தேர்தல் அதிகாரிகளுடன் வீடியோ கான்பெரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தம் முடிந்த மாநிலங்களில் புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணிகளை தொடங்கும்படி மாநில தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பீகார் மற்றும் மேற்கு வங்கம் உட்பட 20 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் SIR ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளது. SIR இன் போது அல்லது அதற்குப் பிறகு யாருடைய பெயர் விடுபட்டிருந்தாலும், இளம்/முதல்முறை வாக்காளர் உட்பட யாரேனும் ஒருவர், புதுப்பித்தல் செயல்முறையின் கீழ் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைச் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம். சிறப்பு SIR இன் போது அல்லது அதற்குப் பிறகு வெளியேறிய தகுதியுள்ள வாக்காளர்களை, படிவம் 6ஐப் பயன்படுத்தி தொடர்ச்சியான புதுப்பித்தல் செயல்முறையின் மூலம் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று அத்தகைய வாக்காளர்களைக் கண்டறிந்து அவர்களின் தற்போதைய நிலையைக் கண்டறிந்து படிவம் 6 மூலம் சேர்க்கையை எளிதாக்குவார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இப்பணியை ஒரு மாதத்திற்குள் முடிக்கவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/trending/order-issued-to-include-omitted-and-new-voters-in-states-where-the-special-summary-revision-ssr-has-concluded




