புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே கோங்குடிபட்டி முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் நாகராஜ் (59) வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே தன்னாங்குடியை சேரந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ், இவர் இன்று காலை அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் தனது மனைவியை பள்ளியில் இறக்கி விட்டு மீண்டும் பாக்குடி வழியாக வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பாக்குடி பெரிய குடும்பம்பட்டி சாலையில் இவரை வழிமறித்த மர்ம நபர்கள், தலையை துண்டித்து படுகொலை செய்து விட்டு கண் இமைக்கும் நேரத்தில் மின்ன வேகத்தில் தப்பி ஓடி விட்டனர். பாக்குடி கவரச்சி குளக்கரை தார் சாலை நடுவே வெட்டுக்காயத்துடன் சடலமாகக் கிடந்தவரை போலீசார் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இவருக்கும் பக்கத்து வீட்டில் வசித்து வரும் முத்துலட்சுமி என்பவருக்கும் ஏற்கனவே இட பிரச்சினை தொடர்பாக வழக்கு இருப்பதாகவும், இந்த வழக்கில் நாகராஜ் மீது இலுப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த கொலைக்கான காரணம் இடப்பிரச்சினையா அல்லது வேறு ஏதும் பிரச்சினையா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட நாகராஜ் ஏற்கனவே கோங்குடிபட்டி ஊராட்சி மன்ற தலைவராகவும் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/pudukkottai-former-panchayat-president-beheaded-and-murdered




