தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களத்தில் உள்ள கார்த்திகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று இரவு தொண்டர்கள் மத்தியில் பேசிய சீமான், "திராவிட கட்சிகளுக்கு எதிராக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி களத்தை உருவாக்கி வைத்திருந்தோம். தம்பி விஜய் அதை அறுவடை செய்துவிட்டார். தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை என்று எந்தப் போராட்டமும் அவர்கள் நடத்தியதில்லை. சீமான் மக்களின் பிரச்னைகளை மனதில் இருந்து பேச தெரியாதவர்கள் அவர்கள். குறிப்புகளை வைத்துக் கொண்டு பேசுபவர்கள் தலைவர்கள் கிடையாது. குறிக்கோளுடன் பேசுபவர்கள்தான் தலைவர்கள். ஆட்டுக்கு இருக்கும் மூளை கூட தமிழக வெற்றிக் கழகத்தில் இருப்பவர்களுக்குக் கிடையாது. எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்தால் என்னை துணை முதலமைச்சர் ஆக்குவதாகச் சொன்னார் ஆதவ் அர்ஜுனா. நாங்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்பதால் வேளாண்துறை அமைச்சர் ஆக்குகிறோம் என்றார். எங்களுக்கு உடன்பாடு இல்லை என வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டோம்" என்றார். ஜெம் வீரமணி வழக்கு: ``தொடர்புடைய குற்றவாளிகளும், துணைபோன முந்தைய ஆட்சியாளர்களும்"- சீமான் காட்டம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/election/seeman-speech-about-aadhav-arjunas-secret-dealing-controversy



