புதுடெல்லி, டெல்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இது நேற்று முதல் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. டெல்லியில் குளிர்கால மாசுபாட்டை தடுக்க கட்டுப்பாடுகள் விதிப்பு டெல்லியில் குளிர்கால மாசுபாட்டை தடுக்க டெல்லி அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. இது நேற்று முதல் அமலுக்கு வந்தது. குறிப்பாக வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை, பெரிய மாசு அச்சுறுத்தலாக இருப்பதால் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதன்படி டெல்லியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகளில் இது நேற்று முதல் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் இல்லை இந்த பெட்ரோல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள், வாகனங்களின் பதிவு எண்ணை கொண்டு அவற்றுக்கு மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இருக்கிறதா?, இல்லையா? என்பதை கண்டுபிடித்து விடும். சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் நிலைய ஊழியர்கள் எரிபொருள் வழங்குவது இல்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/no-fuel-for-vehicles-without-pollution-control-certificate-in-delhi




