திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 71 ஆயிரத்து 393 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 27 ஆயிரத்து 846 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று தேவஸ்தானம் அறிவித்த ஒருநாள் உண் டியல் காணிக்கை ரூ.4 கோடியே 46 லட்சம் ஆகும். அன்று 4 லட்சத்து 33 ஆயிரம் லட்டுகள் விற்பனையாகின. 2 லட்சத்து 58 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. 3 ஆயிரத்து 285 பேருக்கு மருத்துவச் சேவைகள் அளிக்கப்பட்டது. திருமலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பினர். தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட 'டைம் ஸ்லாட்' டோக்கன்கள் இல்லாமல் இல வச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் ஏழுமலையானை வழிபட சுமார் 12 முதல் 15 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/tirupati-temples-single-day-hundi-offering-stands-at-446-crore




