சென்னை, சென்னை பல்கலை சிண்டிகேட் குழு கூட்டம், பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. உயர்கல்வித்துறை செயலர் தீரஜ்குமார் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், சிண்டி கேட் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். மொத்தம் 35 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு, அதுகுறித்து விவாதிக்கப்பட்டன. குறிப்பாக, பல்கலை பதிவாளர் ரீட்டா ஜான் பணி நீட்டிப்பு தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பொதுவாக, பல்கலை பதிவாளராக ஒருவர் தேர்வு செய்யப்படும்போது, ஆண்டு பதவி காலத்தில், முதல் ஆண்டு, தகுதிகாண் பருவமாக கருதப்படும். மூன்று பதிவாளராக ஓராண்டு காலம் அவர்களின் செயல்பாடுகள் குறித்து, துணை வேந்தரின் செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில், அடுத்த இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்படும். தற்போது, சென்னை பல்கலை பதிவாளர் ரீட்டா ஜான், 2026 ஜூன் 26ம் தேதியுடன், ஓராண்டு பதவி காலத்தை நிறைவு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, செயல்திறன் மதிப்பீட்டின்படி, அவரது பணி மேலும் காலத்தை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பது தொடர்பாக, தீர்மானம் கொண்டுவரப்பட்டு, பரிசீலிக்கப்பட்டது. இதுகுறித்து 'செனட்' கூடும்போது, பரிசீலிக்கலாம் என, துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழு அதிகாரிகள் தள்ளி வைத்துள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து, பல்கலை வட்டாரங்கள் கூறியதாவது; பதிவாளர் நியமனத்தில் விதிமீறல் நடந்துள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. பதிவாளர் நியமனத்துக்கு, பல்கலையின், 'செனட்' ஒப்புதல் வழங்க வேண்டும். ஆனால், ஓராண்டாக, செனட் கூடாததால், பதிவாளர் நியமனத்துக்கு இதுவரை ஒப்புதல் இல்லை. இந்த சூழலில், அடுத்த இரண்டு ஆண்டு பணி காலத்தை நீட்டிப்பது தொடர்பாக, சிண்டிகேட்டில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சட்டப்பிரச்னை ஏற்படாமல் இருக்க, பதிவாளரின் பணி கால நீட்டிப்பு தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில், 'செனட்' கூடும்போது, பணிக்கு ஒப்புதல் பெறப்பட்டு, பணி காலம் நீட்டிப்பது குறித்து பரிசீலிக்க சிண்டி கேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/suspension-of-extension-of-term-of-registrar-of-chennai-university




