தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி, கொலை வழக்கு சாட்சிகளை அரிவாளை காட்டி மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். பூசாரி கொலை வழக்கில் ஜாமீனில் வந்த ரவுடி தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி, பெருமாள்புரத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து (வயது 27) மீது கொலை உள்பட 12 வழக்குகள் ஆறுமுகனேரி, ஆத்தூர் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. கடந்த ஆண்டு ஆறுமுகனேரி - காயல்பட்டினம் புறவழிச்சாலையில் உள்ள சுடலைமாடசுவாமி கோவில் பூசாரி முருகேசனை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர், சமீபத்தில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து திருச்செந்தூர் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார். அரிவாளை காட்டி மிரட்டல் இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை ஆறுமுகனேரி, செல்வராஜபுரம் மாரியம்மன் கோவில் அருகே பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் இசக்கிமுத்து அரிவாளைக் காட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார். பூசாரி கொலை வழக்கில் தனக்கு எதிராக சாட்சி சொல்பவர்களை கொலை செய்து விடுவதாகவும் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த ஆறுமுகனேரி போலீசார், இசக்கிமுத்து மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/murder-case-rowdy-arrested-again-after-being-released-on-bail-for-threatening-witnesses




