வார்சா, போலாந்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி மீது ரெயில் மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்தனர். ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு போலாந்து. இந்நாட்டின் கடன்ஸ் நகரில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை வாகனங்கள் கடக்க பாதை உள்ளது. லாரி மீது ரெயில் மோதி விபத்து இந்நிலையில், அந்த தண்டவாளத்தை நேற்று மதியம் லாரி கடக்க முன்றது. அப்போது ரெயில் வருவதற்கான நேரம் ஆனதால் உடனடியாக ரெயில்வே தண்டாளத்தின் கதவுகள் மூடப்பட்டன. இதனால், லாரி ரெயில்வே தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டது. அப்போது, ஹிடினா நகரில் இருந்து சிலோனா கொரா நகருக்கு வேகமாக வந்த பயணிகள் ரெயில் தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது. இந்த கோர விபத்தில் லாரியின் பின்பகுதி பலத்த சேதமடைந்தது. அதேபோல், லாரியில் இருந்த டிரைவர் உள்பட 4 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. In Gdańsk, Poland, a passenger train collided with a truck at a railway crossing Instead of driving straight through and breaking the lowered barrier, the driver reversed and tried to maneuver. The truck driver was injured. Several train passengers suffered minor injuries. — Visegrád 24 (@visegrad24) September 4, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/train-truck-smash-in-poland




