டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் நத்தத்தில் இன்று (புதன்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. போட்டிகள் மொத்தம் உள்ள 32 ஆட்டங்களில் திண்டுக்கல்லில் 20 போட்டிகளும், சென்னையில் 12 ஆட்டங்களும் நடக்கிறது. 16 மற்றும் 17ந் தேதி ஓய்வு தினமாகும். டிஎன்பிஎல் 8 அணிகள் பங்கேற்கும் டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 10-வது சீசன் இன்று நத்தத்தில் கோலாகலமாக தொடங்கியது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நடப்பு சாம்பியன் திருப்பூர் தமிழன்ஸ், கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இன்றைய ஆட்டம் டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் நத்தத்தில் இன்று (புதன்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் மாலை 3.30 மணிக்கு திருச்சி கிராண்ட் சோழாஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் மற்றொரு ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, நெல்லை ராயல் கிங்சை சந்திக்கிறது. சாதனையின் விளிம்பில் ஜெகதீசன் என்.ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் அபிஷேக் தன்வர், வாசீம் அகமது, ஆஷிக், மொஹித் ஹரிகரன், சுழற்பந்து வீசும் அதிரடி ஆல்-ரவுண்டர் அஷ் வந்த் வல்தபா, வேகப்பந்து வீச்சாளர்கள் பிரேம்குமார், லோகேஷ் ராஜ், சுழற்பந்து வீச்சாளர்கள் மோகனபிரசாத், சிலம்பரசன் உள்ளிட் டோர் வலு சேர்க்கிறார்கள். சாதனையின் விளிம்பில் உள்ள ஜெகதீசன் இந்த ஆட்டத்தில் 8 ரன் எடுத்தால், டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்தவரான பாபா அபராஜித்தின் (2,447 ரன்) சாதனையை முறியடிப்பார். நெல்லை ராயல் கிங்ஸ் அணியில் கடந்த சீசனில் அதிக விக்கெட் (16) வீழ்த்தியவரான கேப்டனும் ஆல்-ரவுண்டருமான சோனு யாதவ், முகிலேஷ், சந்தோஷ்குமார், முகமது அட்னன் கான், ரித்திக் ஈஸ்வரன், அஜிதேஷ், சச்சின் ரதி, ராக்கி பாஸ்கர் என சிறந்த வீரர்கள் உள் ளனர். ஏறக்குறைய சரிசம பலத்துடன் மோதுவதால் ஆட்டத்தில் விறுவி றுப்புக்கு பஞ்சமிருக்காது. இவ்விரு அணிகள் இதுவரை 10 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 6-ல் சேப்பாக் சூப்பர் கில்லீசும், 4-ல் நெல்லையும் வெற்றி கண்டுள்ளன. போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென்4 தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. DD open their campaign with a memorable victory! August 04-28 | Dindigul & Chennai. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/tnpl-cricket-chepauk-super-gillies-vs-nellai-royal-kings-clash-today




