சென்னை, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் உமர் பாரூக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “இந்திய தேர்தல் ஆணையத்தின் சக ஆணையர்களான டாக்டர் சுக்பீர் சிங் சாந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோரின் ஒப்புதலோ அல்லது ஆலோசனையோ இன்றி, தலைமை தேர்தல் ஆணையரால் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளையும், விதி மாற்றங்களையும் தேர்தல் ஆணையம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் ஒருசார்பாகச் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறிவந்த குற்றச்சாட்டுகளை, சக ஆணையர்களின் எதிர்ப்புகளே தற்பொழுது முழுமையாக ஊர்ஜிதப்படுத்தியுள்ளன. அரசியலமைப்பு அமைப்பான தேர்தல் ஆணையத்திற்குப் பின்னால் நின்று அதனை இயக்கும் "கண்ணுக்குத் தெரியாத மூன்றாவது கை" ஒன்று செயல்படுவது இதன் மூலம் தெளிவாகிறது. இது இந்திய ஜனநாயகத்தில் விழுந்த மிகப்பெரிய கரும்புள்ளியும், வெளிப்படையான ஜனநாயகப் படுகொலையுமாகும். புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் 'படிவம் 6'-ல், புதிய வாக்காளர்களின் பெற்றோர் அல்லது தாத்தா-பாட்டி 2000-ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்களா என்பதைக் கட்டாயமாகக் கேட்கும் அம்சம் சட்டவிரோதமானது என சக ஆணையர்களே சாடியுள்ளனர். இது முதன்முறை வாக்காளர்களைத் தேவையின்றி அலைக்கழிக்கும் முயற்சியாகும். மேலும், களத்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளின் அதிகாரத்தைப் பறித்து, டெல்லியில் உள்ள தொழில்நுட்பப் பிரிவின் கீழ் ஆணையத்தின் மென்பொருள் (ERONet/ECINet) கட்டுப்பாடுகளை மையப்படுத்துவது, தகுதியுள்ள வாக்காளர்களைத் திட்டமிட்டுப் பட்டியலில் இருந்து நீக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் உச்சபட்ச ஐ.ஏ.எஸ். அதிகாரியான கேபினட் செயலாளருக்குச் சக ஆணையர்களே கடிதம் எழுதும் அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ள சூழலில், நாட்டின் உச்ச நீதிமன்றம் இதில் உடனடியாகத் தானாக முன்வந்து வழக்கைப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும். வெளிப்படைத்தன்மையற்ற சூழலிலும், சக ஆணையர்களின் எதிர்ப்பையும் மீறி தலைமைத் தேர்தல் ஆணையரின் தன்னிச்சையான நடவடிக்கைகளின் கீழ் நடைபெற்ற தேர்தல்களை உச்ச நீதிமன்றம் தலையிட்டு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-election-commissioner-gyanesh-kumar-must-resign-immediately-sdpi-demands




