வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘சென்னை 28’ படத்தின் 3ம் பாக படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபுவின் ‘சென்னை 28’ இயக்குநர் வெங்கட் பிரபு ‘சென்னை 28’ படத்தின் மூலம் இயக்குநராக கடந்த 2007ம் ஆண்டில் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்து தமிழ்த் திரையுலகில் தனக்கென தனியிடத்தைப் பிடித்தார். இவர் சரோஜா, கோவா, மங்காத்தா, ‘சென்னை 28’ 2ம் பாகம், மாநாடு, தி கோட் போன்ற வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். ஆரம்பத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் தனது முதல் படம் வெளியாகாத நிலையில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். ‘சென்னை 28’ படத்தில் எஸ்.பி.பி, சரண், ஜே.கே. சரவணா தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன் ஆகியோர் இசை அமைத்து இருந்தனர். மேலும் இப்படத்தில் சிவா, ஜெய், நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். கிரிக்கெட் விளையாட்டையும் நட்பையும் மையமாகக் கொண்டு நகைச்சுவையாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ‘சென்னை 28’ 2ம் பாகம் இதனைத் தொடர்ந்து, 2016 ம் ஆண்டு இரண்டாம் பாகமான ‘சென்னை 28’ வெளியானது. இப்படமும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதை அடுத்து மூன்றாம் பாக வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ‘சென்னை 28’ 3ம் பாக படப்பிடிப்பு அப்டேட் இந்த நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘சென்னை 28’ 3ம் பாகம் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் இதற்கென பிரத்யேகமான அரங்கம் அமைக்கப்பட்டு, அக்டோபர் முதல் வாரத்தில் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் சுமார் 10 நாட்கள் நடைபெறுகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த பிறகு, இரண்டாம் கட்ட பணிகள் பாங்காக்கில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/venkat-prabhus-chennai-28-part-3-film-shooting-update




