திருநெல்வேலி, நெல்லை பெருமாள்புரம் பகுதியில் ஒரு நபரை கிரைண்டர் ஆப் மூலம் அழைத்து, மிரட்டி பணம் பறிக்க முயன்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கிரைண்டர் ஆப் மூலம் அழைத்து பணம் பறிக்க முயற்சி திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சேலம் பகுதியை சேர்ந்த ஒரு நபரை, மர்ம நபர்கள் சிலர் Grindr (கே-Gay) செயலி மூலம் அழைத்து, மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்துள்ளனர். இது தொடர்பான புகாரின்பேரில் பெருமாள்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 3 வாலிபர்கள் கைது அதில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பொன்னாக்குடியைச் சேர்ந்த முருகன் மகன் பூபதிராஜா (வயது 20), முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர்களான பெருமாள் மகன் அருண்(20), பாலமுருகன் மகன் விஷ்ணுசுப்பு(21) ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த பைக்கை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/attempt-to-extort-money-through-grindr-app-in-nellai-3-arrested




