திருவனந்தபுரம், கேரள மாநிலம் கோட்டயம் அருகே நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு இளைஞர் ஒருவர் அதற்குள் தூங்கியதால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நடுவழியில் நின்ற கார் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் எட்டுமானூர் - அதிரம்புழா சாலையில் உள்ள அதிரம்புழா பள்ளி சந்திப்பு அருகே ஜோபின் ஜானி என்ற இளைஞர், மதுபோதையில் தனது காரில் மிக அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்கவிட்டபடி வந்துள்ளார். அப்போது போதையின் உச்சத்தில் இருந்த அவர் திடீரென சாலையின் நடுவிலேயே காரை நிறுத்தினார். மேலும் காரை ஓரமாக நிறுத்தக்கூட முயலாமல் அப்படியே சீட்டில் சாய்ந்து தூங்கிவிட்டார். அணிவகுத்து நின்ற வாகனங்கள் காரின் பின்னால் வந்த அரசு பேருந்து மற்றும் பல வாகனங்கள் அவரின் காரினை கடந்து செல்ல முடியாமல் நடுவழியில் ஸ்தம்பித்தன. இதனால் அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காரில் ஏதோ ஆபத்து என நினைத்த பொதுமக்கள், காரின் அருகே சென்று பார்த்தபோது இளைஞர் தூங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இளைஞர் கைது பொதுமக்கள் நீண்ட நேரம் காரை உலுக்கி, கதவைத் தட்டி அந்த இளைஞரை ஒருவழியாக எழுப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காரை சோதனையிட்டபோது அதற்குள் மதுபாட்டில்கள் இருந்தன. அவர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து ஜோபின் ஜானியைக் கைது செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/sensation-in-kerala-young-man-falls-asleep-after-stopping-car-in-the-middle-of-the-road-video-viral



