சென்னை, மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு இந்திய தேசிய லீக் ஆதரவு தெரிவித்துள்ளது. மதுராந்தகம் தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு உள்ளிட்ட 7 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் அதில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதியில் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு வேட்பாளர்களாக த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தா மன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் உள்ளிட்ட 48 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. தாராபுரம் அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தொடங்கியது. கடந்த 16-ந்தேதி வேட்புமனு தாக்கல் முடிந்தது. அதன்படி, த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு மற்றும் நா.த.க. வேட்பாளர்கள் என மொத்தம் 51 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான பரிசீ லனை 17-ந் தேதி நடந்தது.இதில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளர் சுகன்யா, அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் லட்சுமணன் உள்பட 22 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. மீதமுள்ள 29 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க. கூட்டணி, திமுக, அதிமுக, நாதக, இடதுசாரிகள் என 5 முனைப் போட்டி நிலவுகிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு இந்த சூழலில் மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 27-ஆக ஆனது. தாராபுரம் தொகுதியில் 14 சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 22 பேர் போட்டியிடுகின்றனர். தற்போது இடைத்தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. இந்திய தேசிய லீக் கட்சி ஆதரவு இந்நிலையில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு இந்திய தேசிய லீக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த இந்திய தேசிய லீக் மாநிலத் தலைவர் அல்ஹாஜ் எம். பஷீர் அகமது உள்ளிட்ட நிர்வாகிகள் தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றிக்கு முழுமையாக பாடுபடுவோம் என உறுதியளித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-constituency-by-elections-indian-national-league-extends-support-to-dmk-alliance




