சேலம், குடும்ப கட்டுப்பாடு செய்த இளம்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3-வது குழந்தை சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே மோதூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன் ( 27 வயது). பொக்லைன் டிரைவர். இவருடைய மனைவி சுமதி (23 வயது). இவர்களுக்கு மவுரிசா (4 வயது), ஹர்சா (2 வயது) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், சுமதி மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு கடந்த 42 நாட்களுக்கு முன்பு கருமந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3-வதாக ஆண் குழந்தை பிறந்தது. குடும்ப கட்டுப்பாடு தொடர்ந்து சுமதிக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து வாழப்பாடி அருகே ஆரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுமதிக்கு மருத்துவர்கள் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தனர். அதன்பிறகு சிறிது நேரத்தில் அவரது உடல்நிலை மோசமானது. அவரை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுமதியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உறவினர்கள் போராட்டம் இதனிடையே, தவறான சிகிச்சையால் சுமதி இறந்துவிட்டதாகவும், அவரது 3 குழந்தைகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் சுமதியின் குடும்பத்தினர், உறவினர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இழப்பீடு வழங்கும் வரை சுமதியின் உடலை வாங்கமாட்டோம் என்று உறவினர்கள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-dies-after-family-planning-surgery-relatives-protest




